வெள்ளைப் பிள்ளையார்
பல்லவி
வெள்ளை வாரணப் பிள்ளையாரை
உள்ளத்தில் வைத்து அனுதினம் துதித்தேன்
அனுபல்லவி
கள்ளமில்லாத கலியுகக்கடவுளை
தெள்ளியர் போற்றும் தாமரைப்பாதனை
சரணம்
பள்ளிகொண்டிருக்கும் கேசவன் மருகனை
அள்ளக்குறையாத கருணை ஊரணியை
முள்ளாயுறுத்தும் பவவினைப் பயன்களை
தள்ளிக்களைந்திட வேண்டுமெனத்தொழுதேன்
No comments:
Post a Comment