ஸ்ரீ காமாக்ஷி
பல்லவி
"ஸ்ரீ ராகம் "தனில் மயங்கும் காமாக்ஷியே
பாராமுகம் ஏனோ கூறாயோ தாயே
துரிதம்
நரர்சுரர் நான்முகன் அரனரி இந்திரன்
சரவணன் கணபதி அனைவரும் வணங்கிடும்
அனுபல்லவி
பேராயிரம் கொண்ட ஸ்ரீலலிதாம்பிகையே
தீராவினைதீர்க்கும் கேசவன் சோதரி
சரணம்
பார்புகழ் கலைமகளும் மலைமகளும் நேசிக்கும்
நாராயணி கௌரி மாகாளி பைரவி
நேரெதிர் நின்றுனை தினம் தொழுவதல்லா து
வேறொன்றும் ஏழையேன் செய்திலேன் அன்னையே
" ॐ स्रिमाथा स्रिमहराग्ने स्रिमतः सिम्हास्वनेस्वरि "
No comments:
Post a Comment