Saturday, 25 January 2014

கண்ணபெருமான்



கண்ணபெருமான்


         பல்லவி

கண்ணபெருமானே உன்னைக்கண்டு மகிழ்ந்தேனே
வண்ணமுறக்காட்சிதரும் கேசவனே மாதவனே

         அனுபல்லவி

விண்ணளந்து மண்ணளந்து மூவடியலுலகளந்த
புண்ணியனே புவி போற்றும் ராதையின் நாயகனே

            சரணம்

பண்ணிசைத்துக்குழலூதி உள்ளம் கொள்ளை கொண்டவனே
வெண்ணிலவு முகம் காட்டி மதி மயக்கும் மாலவனே
வெண்ணையுண்ட வாயனே வேதம் போற்றும் திருமாலே

எண்ணமெல்லாம் நிறைந்திருக்கும் வைகுண்டவாசனே






No comments:

Post a Comment