Friday, 31 January 2014
வரசித்தி விநாயகன்
வரசித்தி விநாயகன்
பல்லவி
சித்திவிநாயகனைப் பணிந்தேன்
வித்தகர் போற்றும்
கரிமுகனை வர
அனுபல்லவி
யத்தனம் செய்து துவங்கிடும்
கருமங்கள்
அத்தனையுமிடரின்றி நடைபெற
உதவிடும்
சரணம்
முத்தமிழ்க் கலைகளியலிசை
நாடகம்
மொத்தமும் ரசித்திடும்
கேசவன் மருகனை
பித்தன் சிவன் மகனை
ஆனைமுகத்தோனை
எத்திசையும் புகழ்
விளங்கும் ஸ்ரீ கணநாதனை
பிந்துமாலினி
பிந்துமாலினி
.
பல்லவி
இந்தினிளம்பிறை சூடிய
தேவி
பிந்துமாலினி மலரடி
பணிந்தேன்
துரிதம்
கந்தன் கணபதி கணங்கள் நந்தி
கேசவன் பிரமனிந்திரன் வணங்கிடும்
அனுபல்லவி
யந்திரவரடிவாய் மந்திர
மேருவில்
சந்ததம் வீற்றிருக்கும்
திரிபுரசுந்தரி
சரணம்
வந்தனை
புரிந்திடுமனைவர்க்குமருள்தரும்
அந்தரி நீலி அகிலாண்டேச்வரி
விந்தையே உந்தன்
விளையாட்டெல்லாம்
எந்தனையாண்டருள
வேண்டுமெனத்துதித்து
Bindhumaalini
Pallavi: Inthin Ilampirai soodiya
devi
Bindhumalini malarati paninthen
Thuritham: Kanthan Kanapathi
kanangal nandhi
Kesavan piraman inthiran vanangitum
Anupallavi: yanthiravativaay
manthira meruvil
Santhatham veetrirukkum thiripursundhari
Saranam : vanhtanai purinthitum
anaivarkkum arultharum
Anthari neeli Akilaadesvari
Vinthaye unthan vilayaattellam
Enthanai anndarula ventumena
thuthiththu
Bindhumalini adorned with crescent
moon I salute your flowery feet
Thiripurasundhai always sitting as
yanthira roopa on the Meru
Oh,Goddess Anthari, Neeli, bestowing
all good things to those who propitiate you;
Interesting is all your play, I pray
to you for my salvation.
சாமுண்டேச்வரி
சாமுண்டேச்வரி
பல்லவி
அருள்மிகு சாமுண்டேச்வரியைப்பணிந்தேன்
திருச்சக்கரம்தனில்
வீற்றிருக்குமன்னை
துரிதம்
திருமகள் கலைமகள் அரனரி அயனும்
முனிவரும் தேவரும்
கரம்பணிந்தேத்தும்
அனுபல்லவி
கருமுகில் வண்ணன் கேசவன்
சோதரி
இருவினைப்பயங்களைக்களைந்திடுமீச்வரி
சரணம்
தரும நெறிதழைக்க அரக்கரை
அழித்த
பெருமைக்குரிய
மகாதிரிபுரசுந்தரி
அருமறைகள் போற்றுமாதி
பராசக்தி
கருணைமழை பொழியும்
கௌரிமனோகரி
முக்குருணி கணபதி
முக்குருணி கணபதி
பல்லவி
முக்குருணி கணபதியை
மனமாரத்துதித்தேன்
சொக்கநாதனும்
மீனாக்ஷியும் போற்றும்
அனுபல்லவி
சிக்கல் சிங்காரவேலன் தமையனை
துக்கமிடர்களையும்
தும்பிமுகப்பெருமானை
சரணம்
தக்கசிறுபிறையணிந்த ஓங்காரவடிவினனை
சக்கரக்கையன் கேசவன் மருகனை
பக்கமிரு தேவியரை
வைத்திருக்கும் கரிமுகனை
எக்கணமும் மறவாத மனமருள
வேண்டினேன்
அபிராமி
அபிராமி
பல்லவி
அன்னையபிராமியை
மனமாரப்பணிந்தேன்
மன்னுபுகழ் திருக்கடையூர்
திருத்தலத்தில் காட்சிதரும்
அனுபல்லவி
முன்னொருநாள்
அபிராமபட்டருக்கருளிய
பன்னகசயனன் கேசவன்
சோதரியை
சரணம்
புன்சிரிப்பால்
புரமெரித்த அமிர்தகடேஸ்வரர்
தன்னருகில் வீற்றிருந்து பக்தருக்கு
அருளளிக்கும்
அன்னபூரணியை
அகிலாண்டேஸ்வரியை
என்னைக் காத்தருள
வேண்டுமெனத்துதித்து
Thursday, 30 January 2014
ஸ்ரீ ராஜகோபாலன்
ஸ்ரீ ராஜகோபாலன்
பல்லவி
ஸ்ரீ வித்யா ராஜகோபாலனை
மன்னார்குடித் தலத்தில் மனமாரத்துதித்தேன்
துரிதம்
தேவரும் முனிவரும்
சுகசனகாதியரும்
நாரதரும் நான்முகனும்
யாவரும் வணங்கிடும்
அனுபல்லவி
தேவியர் பாமா ருக்மணி
உடனிருக்கும்
தேவகி மைந்தனை ஆமருவியப்பனை
சரணம்
கோவர்த்தன
மலையைக்குடையாகப்பிடிதவனை
மூவடியாலுலகளந்த வாமனனைக்
கேசவனை
சேவடி பணிவோர்க்கு
அருள்தரும் மாதவனை
மூவாசைப்பிணி போக்கும்
தேவாதிதேவனை
Wednesday, 29 January 2014
நளின காந்திமதி
நளின காந்திமதி
இராகம்: நளினகாந்திமதி தாளம்:ஆதி
பல்லவி
நளினகாந்திமதியைத் துதித்தேன்
பளிச்சிடுமழகுடன் நெல்லையில்
காட்சி தரும்
அனுபல்லவி
களிநடம் தாமிரசபைதனில் புரிந்திடும்
இளகிய மனமுடை ஈசனிடமமர்ந்த
சரணம்
பளிங்கு மேனியும் பவளச்செவ்வாயும்
ஒளி தரும் முகமும்
திகழுமீச்வரியை
நளினநாபன் கேசவன் சோதரியை
எளியோர்க்கருளும் கருணாகரியை
Pallavi : Nalina kaanthimathiyai thuthiththen
Palichitum
azhakutan nellaiyil kaatchi tharum
Anupallavi: Kalinatam thaamira sabaithanil purinthitum
Ilakiya
manamutai isanitamamarntha
Saranam : Palingu meniyum pavala chevvayum
Oli
tharum mukamum thikazhumeeswariyai
Nalinanaban
Kesavan sothariyai
Eliyorkkarulum karunaakariyai
Pallavi:My prayers to beautiful Nalinakanthimathi at
Nellai
Anupallavi: One who is sharing the left side of siva
dancing happily at ‘Thamira sabai’
Saranam: Eswari
endowed with mirror like body,
cherry lips, charming face and sister of
Kesava having lotus on his belly,
And who is embodiment
of karuna
.
குரு தத்தாத்திரேயன்
குரு தத்தாத்திரேயன்
பல்லவி
அத்ரி குமாரனை தத்தாத்ரேயனை
சித்திரத்தில் கண்டு மனமாரத்துதிதேன்
மூவருமான முழுமுதற்கடவுளை
துரிதம்
மூவிரு கரங்களில் மாலை கமண்டலம்
சங்கு சக்கரம் உடுக்கை ஈட்டி
ஏந்தியே காட்சியளித்திடும் நேயனை
அனுபல்லவி
பத்ரி நாராயணன் கேசவன் நேசனை
தத்துவப்பொருளான சச்சிதானந்தனை
சரணம்
சித்தரும் முனிவரும் யோகியரும் ஞானியரும்
சித்தத்தில் வைத்து என்றென்றும் வணங்கிடும்
எத்திசையும் புகழ் விளங்கும் உத்தமனை
வித்தகர் போற்றும் ஞானகுருவை
ஸ்ரீ மாதா மகாலக்ஷ்மி
ஸ்ரீ மாதா மகாலக்ஷ்மி
பல்லவி
நல்லவளே ஸ்ரீ மகாலக்ஷ்மி
அல்லல் களைந்திடும் திருமகளே
அனுபல்லவி
வல்லவளே சங்கும் சக்கரமும் ஏந்திடும்
நல்லருள் தந்திடும் ஸ்ரீ லலிதாம்பிகையே
சரணம்
அல்லும் பகலுமுனைத் துதித்திடுமடியார்க்கு
இல்லாமை இல்லாமல் செய்திடும் ஸ்ரீ தேவி
புல்லங்குழலிசைக்கும் கேசவன் நாயகி
எல்லாமும் நீயே மாதா மகாமாயே
Subscribe to:
Posts (Atom)