சிவன்
பல்லவி
சிவனுனைத்துதித்தேன் பவபயம் களைந்தேன்
அவனியோரனைவரும் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
நவக்கிரகங்களும் நந்தியும் கணங்களும்
தவ நெறியாளரும் தேவரும் வணங்கிடும்
சரணம்
துவக்கமும் முடிவுமில்லாத ஈசனை
சிவகாமி சோதரன் கேசவன் நேசனை
புவனமனைத்தையும் படைத்தும் காத்தும்
உவகையுடனே நிலைபெறச்செய்திடும்
No comments:
Post a Comment