தத்தாத்ரேயன்
பல்லவி
மும்மூர்த்தியாய் விளங்கும் தத்தாத்ரேயனை
ஆதிபகவனை மனமாரத்துதித்தேன்
ம.காலம்
மாலை சூலம் சங்கு சக்கரம் கமண்டலம்
டமருவை
கரங்களிலேந்தி
அனுபல்லவி
இம்மானிலம் போற்றும் வேதப்பொருளை
அம்மையுமப்பனும் குருவுமானவனை
சரணம்
இம்மைக்கும் மறுமைக்கும் துணையாயிருப்பவனை
சும்மாயிருத்தலின் மெய்ப்பொருளறிந்தவனை
தம்மையறிந்தவருள்ளத்திலிருப்பவனை
எம்மை என்றென்றும் காத்தருளும் கேசவனை
No comments:
Post a Comment