மழை
மழை பெய்து ஓய்ந்துவிட்டது
தூவானம் விடவில்லை
வானம் மட்டும் இருண்டே இருந்தது
சாலையில் புழுதியுடன் கலந்து சென்னிற சிற்றோடையாக
தெருவில் வெள்ளம் ஓடி வடியத்தொடங்கிவிட்டது
மரஇலைகளிலிருந்து மழைத்துளிகள்
மெல்லிய காற்றுடன் காதல் செய்து சொட்டிக்கொண்டிருந்தன
பச்சை இலைகளினிடையே பறவைகள்
பறக்கலாமா வேண்டாமா என்று எட்டிப் பார்த்தன
குடைகள் மடங்கத்தொடங்கியது
மரத்தடியே ஒதுங்கிய இருசக்கரங்கள்
பாதையில் பயணப்பட மீண்டும் கிளம்பின
ஒதுங்கியிருந்த பூக்காரக்கிழவியுடன்
நடைபாதைக்கடைகள் இயங்கத்துவங்கின
அங்குமிங்கும் தெருநாய்கள் ஓடத்துவங்கின
சில்லென்று காற்று வீசியது
சாலையோரம் நின்று நானும்
சென்னை மக்களுடன் சேர்ந்து
மீண்டும் மழைக்காகக் காத்திருந்தேன் !
No comments:
Post a Comment