ஸ்ரீ குருவாயுரப்பன்
பல்லவி
குருவாயுரப்பனை நெஞ்சாரத்
துதித்தேன்
ஓரு முறையேனும்
தரிசனம்பெற வேண்டி
அனுபல்லவி
திருக்கரத்தில் சங்கும்
சக்கரமும் கதையும்
மறுகரத்தில்
தாமரைப்பூவையுமேந்தி நிற்கும்
சரணம்
குருநாராயண பட்டத்திரியும்
அருங்கவி பூந்தானமும்
பாடிக்கொண்டாடும்
திருமாலைக் கேசவனை ஸ்ரீ
வாசுதேவனை
கலியுகந்தன்னில் கண்கண்ட
கடவுளை
No comments:
Post a Comment