நர்த்தனகணபதி
பல்லவி
மத்தளம் தாங்கிய
நர்த்தன கணபதியை
சித்தத்தில் வைத்து
மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
தத்துவப்பொருளை சித்தி வினாயகனை
வித்தகர் போற்றும் உத்தமிப்புதல்வனை
சரணம்
மத்தமும் மதியும் வைத்திடும் கரிமுகனை
முத்தமிழ் புகழ்ந்திடும் முழுமுதற்கடவுளை
தத்தளாங்குதக திமிதககிடதக
தத்தித்தோமென நித்தமும் நடமிடும்
No comments:
Post a Comment