சிதம்பரனாதன்
பல்லவி
ஆடும் சிதம்பரனாதனைத்
துதித்தேன்
தோடுடைய செவியனவன்
திருப்பாதம் பணிந்து
அனுபல்லவி
மாடுதனை வாகனமாய்
வைத்திருக்கும் சிவனை
காடுதனில் திரியும்
சுடலைமாடனை
சரணம்
சேடனணை மீது
பள்ளிகொண்டகேசவன்
தேடும் பங்கயப்பதத்தானை
பரமனை
நாடித்துதித்திடுமடியவர்க்கெல்லாம்
வீடு பேறளிக்கவல்ல வேதநாயகனை
No comments:
Post a Comment