“மாத்தியோசி கணபதி”
பல்லவி
தந்தையும் தாயுமே
உலகமென்றுணர்த்திய
எந்தையே கணபதியே உந்தன்
பதம் பணிந்தேன்
அனுபல்லவி
விந்தையாய் சிந்தித்துப்
புதிய வழி கண்டு
வெற்றிக்கனி பெற்ற
வேழமுகத்தோனே
சரணம்
முந்தைய
பழவினைப்பயன்களைக் களைந்திட
எந்தனுக்குதவிட
சந்ததமுனைத்துதித்தேன்
சுந்தர வடிவுடைய கேசவன்
மருகனே
தந்திமுகத்தோனே
தயைபுரிவாயே
No comments:
Post a Comment