ஸ்ரீ க்ருஷ்ணன்
பல்லவி
காண்பவர் மனம் களிக்கச் செய்திடும் பேரழகனை
கண்ணனைக்கண்டு பரவசமடைந்தேன்
ம.காலம்
தக்கிட தரிகிட தளாங்கு தகதிமி
தத்தோம் தகதோம் தித்தோம் திமியென
தத்தித்தரிகிட தளாங்கு கிடவென
பதம் வைத்து ஆடி
அனுபல்லவி
ஆண்டவனவனன்றி வேறுதுணை எனக்கில்லை
ஆண்டருள வேண்டுமென அவன்பதம் பணிந்தேன்
சரணம்
நீண்ட கேசந்தனில் கொண்டையணிந்து
மயில்பீலி சூடி மகரக்குண்டலம் பூண்டு
மீண்டும் மீண்டும் பர்க்கத்தூண்டிடும்
பண்டவர்நேசனைக் குழலூதும் கேசவனை
No comments:
Post a Comment