ஏகதந்தன்
பல்லவி
பல்லவி
விடைவாகனன் மகனே விக்னவினாயகனே
அடைக்கலம் நீயென
உனைச்சரணடைந்தேன்
ம.காலம்
ம.காலம்
நந்தியும் கணங்களும் தேவரும் முனிவரும்
இந்திரன் சந்திரனனைவரும் துதித்திடும்
அனுபல்லவி
இடைதனிலரவணிந்த ஆனைமுகத்தோனே
உடைந்தகொம்பனே ஏகதந்தனே
சரணம்
தடைகளில்லாமல் எடுத்த கருமங்கள்
நடைபெற உதவிடும் வேழமுகத்தோனே
இடைக்குலத்துதித்த கேசவன் மருகனே
கடைக்கண் பார்த்தெனைக் காத்தருள்வாய்
No comments:
Post a Comment