Monday, 9 December 2013


             விக்ன வினாயகன்         
               பல்லவி
 கனியில் கனிவுடன் எழுந்தருளிக் காட்சிதரும்
 கணபதியை உமைமகனை மனமாரத்துதித்தேன்
              அனுபல்லவி
 முனிவரும் தேவரும் கணங்களும் நந்தியும்
 இனிது பணிந்திடும் தனிப்பெருந்தேவனை
              சரணம்
பனிமலைநாதன் பரமசிவன் மைந்தனை
மனிதனாயவதரித்த கேசவன் மருகனை
வனிதையர் சித்தியும் புத்தியும் மணம்புரிந்த
புனிதனை விக்ன வினாயகனை கரிமுகனை

No comments:

Post a Comment