மாயன் கேசவன்
பல்லவி
ஆவினங்கள் மேய்த்திடும் மாயன் கேசவனை
ஓவியத்தில் கண்டாலும் மனம்களித்துத்துதித்தேன்
அனுபல்லவி
பூவிதழ் மீதொரு புல்லாங்குழல் வைத்து
யாவரும் விரும்பும் கானமிசைத்திடுவான்
சரணம்
தாவியணைத்துத் தடுமாறும் கன்றினை
தாய்ப்பசுவுடன் சேர்த்துப் பாலூட்டச்செய்வான்
சேவடி பணிந்திடும் பக்தருக்கெல்லாம்
கோவிந்தன் அன்புடன் அருள்மழை பொழிவான்
No comments:
Post a Comment