Friday, 13 December 2013

 
                  பல்லவி

      அனைத்துமாகி நின்ற  பரம்பொ ருளை த்துதித்தேன்
       அரனயன்  கேசவன் மூவரும்  ஒன் றா கி

               அனுபல்லவி
     வினைப்பயனால் படும் துன்பங்கள் நீங்கிடவும்
     இனிப்பிற வா பேறு  அடைந்திட வேண்டியும்

                     சரணம்
      நடைபெறும்  காரியமும் காரணமும் அவனாகி
      படைத்தல் காத்தல் அழித்தலாகிய
      முத்தொழில் புரிந்திடும் மூவருக்கும் முதலாகி
      விடைபெற வியலாத பேரின்ப வடிவாகி

     
       

No comments:

Post a Comment