பல்லவி
மங்களமளித்திடும் மகாகணபதியை
செங்கண்மால் கேசவன் மருகனை த்துதித்தேன்
அனுபல்லவி
திங்கள் பிறையணிந்த சங்கரன் மகனை
பங்கயபதத்தானை பாலவினாயகனை
சரணம்
அருகம்பில்லும் எருக்கம் பூமாலையும்
அணிந்து அரச மரத்தடியே வீற்றிருக்கும்
எளிய கடவுளை ஏழைப்பங்காளனை
இடர்கள் களைந்திடும் வேழமுகத்தோனை
No comments:
Post a Comment