பங்காரு காமாக்ஷி
பல்லவி
பணிந்தேன் பங்காரு காமாக்ஷி தேவியை
துணிந்தேன் அவளே துணையெனக்கினியென
அனுபல்லவி
அணிமணியாரங்கள் அழகுடனணிந்து
தஞ்சையில் காட்சி தரும் கேசவன் சோதரியை
சரணம்
வணிகமயமாகிவரும் மாயா உலகில்
கணப்பொழுதுமவள் நாமம் மறவாமல் நினந்து
தணியாத பக்தியுடன் தாள் பணிந்தவர்க்கு
பிணியிடர்
கவலைகளனைத்தையும் களைவாள்
No comments:
Post a Comment