கலைவாணி
பல்லவி
சரஸ்வதி உனதிரு சரணகமலங்களை
நமஸ்கரித்தருள்தர வேண்டுமெனப்பணிந்தேன்
ம.காலம்
நரர்சுரர் நாரதர் சுரபதி முனிவர்கள்
அரனயன் கேசவன் அனைவரும் போற்றும்
அனுபல்லவி
கரங்களில் அழகுடன் வீணைதனையேந்தி
தரணியோர் கண்டு மகிழ்ந்திடக்காட்சிதரும்
சரணம்
வெண்பட்டுடுத்தி சந்தனக்காப்பிட்டு
அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவளே
மண்மகளை மலைமகளை நேசிக்கும் கலைமகளே
கண்பார்த்தெனையே காத்தருள்வாயே
No comments:
Post a Comment