அப்பக்குடத்தான்
பல்லவி
எப்போதிரக்கம் வருமோ கேசவா
முப்போதுமுனையே துதித்திடுமெனக்கருள
அனுபல்லவி
அப்பக்குடத்தானாய் கோயிலடித்திருத்தலத்தில்
இப்போதும் வீற்றிருக்கும் அருள்மாகடலமுதே
சரண ம்
முப்பிறப்பில் யான்செய்த வினைப்பயன்கள் நீங்கிடவும்
இப்பிறப்பில் தப்பேதும் செய்யாதிருந்திடவும்
நப்பின்னை தனை மார்பில் வைத்திருக்கும் மணிவண்ணா
ஒப்புயர்வில்லாத மாலேவுன் பதம் பணிந்தேன்

No comments:
Post a Comment