மதுரை மீனாட்சி
பல்லவி
அங்கயற்கண்ணியை மீனாக்ஷியை த்துதித்தேன்
சங்கத்தமிழ் வளர்த்த மதுரையை யாட்சி செய்யும்
அனுபல்லவி
பங்கய மலர்க்கரத்தில் கிளிதனையேந்திடும்
சங்கரி கௌரியை ராஜமாதங்கியை
சரணம்
பொங்கரவணைதுயிலும் கேசவன் சோதரியை
எங்கும் புகழ் விளங்கும் மலையத்வஜன் மகளை
சிங்காரவடிவுடைய சுந்தரேச்வரரின்
பங்கிலுறை ஈச்வரியை மரகத நிறத்தினளை
இங்குமங்குமலைபாயும் மனக்குரங்கை யடக்கி
பொங்கும் மூவாசைப் பிணிதனையே களைந்து
மங்களமாயனைவரையும் வாழவைக்கவேண்டுமென
அங்கம் புழுதிபட பங்கய பதம் பணிந்து
No comments:
Post a Comment