சங்கடம் களந்திடும் கணபதி
பல்லவி
சங்கடம் களைந்திடும் மங்கள மூர்தியை
சங்கரி புதல்வனை மனமாரத்துதித்தேன்
ம.காலம்
அமரரும் பிரமனும் கணங்களும் நந்தியும்
முனிவரும் சகலரும் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
அங்குசம் பாசம் மோதகம்
வைத்திருக்கும்
பங்கயப்பதத்தானை
வேழமுகத்தானை
சரணம்
எங்கும் எவரும் முதலில்
வணங்கிடும்
ஐங்கரனை கரிமுகனை விக்ன
வினாயகனை
பங்கய நாபன் கேசவன்
மருகனை
மங்காதபுகழ் மேவும்
மணித்வீபகணபதியை
No comments:
Post a Comment