Saturday, 21 December 2013

புதிய பாவை நோன்பு



                     புதிய பாவை நோன்பு

                        பல்லவி
என்னருஞ்சினேகிதியே இன்னமுறங்குதியோ
மன்னன் சின்னங்கள் கேட்டும் நீ கிடத்தியோ
                அனுபல்லவி
தென்னாடுடையோன் பெயர் சொன்னாலும் போதும்
தன்னாலே உருகுமுன் தகைமையும் பொய்யோ
              சரணம்
முன்னமெமக்குறைத்த அறிவுரைகள் உனக்கிலையோ
பன்னகசயனன் கேசவன் நேசனை
சின்னஞ்சிறுமியரோதும் குரல் கேளாமல்
பெண்ணே ஈதென்ன பேறுரக்கம் கண்விழிப்பாய்


No comments:

Post a Comment