ராதா மாதவம்
பல்லவி
கண்ணனுன்னைக் காணாமல் என் மனம் தவிக்குதே
கண்ணிரண்டுமங்குமிங்கும் உனைத்தேடியலையுதே
அனுபல்லவி
எண்ணமெல்லாமுன்னையே எண்ணியெண்ணி ஏங்கிட
மண்ணையுண்ட வாயனே இன்னம் நீவராததேன்
சரணம்
வெண்ணிலாவும் வெய்யிலாகச்சுடுவதைப்போல் தோன்றுதே
கண்ணில் காணும் உருவமெல்லாம் உன்னைப்போலத்தெரியுதே
பெண்மனம் புரியாதவன்போலின்னுமென்ன நாடகம்
வெண்ணையுண்ட கேசவா வெட்கம் விட்டலைகிறேன்
மாதவ முரளி கோவிந்தா
யாதவகுலதிலகா விரைவில் வா
ராதையின் நேசனே ஸ்ரீக்ருஷ்ணா
நீதானென் துணை கோபாலா
சோதனை செய்யாமல் வருவாயே
பேதையெனக்கருள் தருவாயே
நாதவினோதா நவனீதா
ராதா மாதவ கோவிந்தா
No comments:
Post a Comment