Tuesday, 17 December 2013

பொன்வண்ணக்கண்ணன்



                பொன்வண்ணக்கண்ணன்

                பல்லவி
அழகன் கண்ணனைக்கண்டு மகிழ்ந்தேன்
நிழல் படச்சித்திரத்தில் பொன்வண்ணமாய்த்திகழும்
               அனுபல்லவி
பழகு தமிழ் மொழியில் பாடல் புனைந்து
கழலடியில் வைத்துக்கேசவனை வணங்கினேன்
                சரணம்
அழைத்தாலும் போதும் அடியவர்க்கருள
ஓடோடி வருவாயே கோவிந்தா இப்போதே
எழந்தருளியென் மனத்தில் நிஜமாய் வீற்றிருக்க
வேண்டுமெனத்துதித்திடும் எனக்கருள்வாயே




No comments:

Post a Comment