ஓங்கார கணபதி
பல்லவி
ஓங்கார கணபதியை மனமாரப்பணிந்தேன்
ஓங்கி உலகளந்த கேசவன் மருகனை
அனுபல்லவி
மாங்கனியை வென்று பெற்றோரே உலகமென்று
ஈங்கிருக்குமனைவருக்குமுணர்த்திய கரிமுகனை
சரணம்
தேங்காயும் வெற்றிலையும் பழம் பாக்கும் வைத்து
நீங்காது அவன் நாமமனுதினமும் துதித்து
தீங்கின்றியனைத்து கருமங்களும் தொடங்கி
பாங்குடனே நடந்தேற அவனருள் வேண்டியே
No comments:
Post a Comment