மகாவிஷ்ணு
பல்லவி
பள்ளி கொண்ட திருமாலைப் பாற்கடல் வாசனை
உள்ளத்திலிருத்தி அனுதினம் துதித்தேன்
அனுபல்லவி
கள்ளத்தனம் செய்யும் கண்ணனாயவதரித்த
பிள்ளையைக் கேசவனை குருவாயுரப்பனை
சரணம்
துள்ளித்திரிகின்ற ஆவினங்கள் மேய்த்திடும்
கள்வனை மாதவனைக் கருநீலவண்ணனை
உள்ளங்களைக் கொள்ளைகொள்ளும் கமலமலர் நாபனை
அள்ளக்குறையாத வெள்ளமென அருளளிக்கும்
No comments:
Post a Comment