Thursday, 26 December 2013

வாயுகுமாரன்











                           வாயுகுமாரன்


                 பல்லவி

வாயுகுமாரனை வந்தனை புரிந்தேன்
தூயமனத்துடன் துதிப்பவர்க்கருளும்

                 அனுபல்லவி

தாயும் தந்தையுமனைத்தும் ராமனென
ஓயாதவன் நாமம் வாயார உரைத்திடும்

                சரணம்

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
நேயமுடன் கற்றவனை கேசவன் நேசனை
பாய்ந்திலங்கை சென்ற ஸ்ரீராமதூதனை
தேயாத புகழ் நிலவும் வீர மாருதியை


No comments:

Post a Comment