ரிஷபப்பிரியன் ராகம் : ரிஷபப்ரியா தாளம் :ஆதி
பல்லவி
விடைவாகனனை ரிஷபப்ரியனை
கேசவன் நேசனை துதிப்பாய் மனமே
அனுபல்லவி
சடையினில் கங்கையும் பிறையும் சூடிடும்
நமச்சிவாயனை நஞ்சுண்ட கண்டனை
சரணம்
படைத்தும் காத்தும் அழித்தும் செய்திடும்
சுடலையாடியை கயிலைநாதனை
மடந்தை பார்வதியின் மனங்கவர் நாதனை
இடப்பதம் தூக்கி ஆடும் நடராஜனை
பல்லவி
விடைவாகனனை ரிஷபப்ரியனை
கேசவன் நேசனை துதிப்பாய் மனமே
அனுபல்லவி
சடையினில் கங்கையும் பிறையும் சூடிடும்
நமச்சிவாயனை நஞ்சுண்ட கண்டனை
சரணம்
படைத்தும் காத்தும் அழித்தும் செய்திடும்
சுடலையாடியை கயிலைநாதனை
மடந்தை பார்வதியின் மனங்கவர் நாதனை
இடப்பதம் தூக்கி ஆடும் நடராஜனை
No comments:
Post a Comment