நித்தியமுனைத்துதித்தேன்…….
பல்லவி
நித்தியமுனைத்துதித்தேன் குருவாயுரப்பா
உத்தமனே கேசவா உனதருள் வேண்டியே
அனுபல்லவி
சத்தியப் பொருள் நீயே குத்தமிலாக் கோவிந்தா
நித்திலத் தொத்தே நிமலனே அமலனே
சரணம்
புத்தம் புதிய சந்தனமணிந்து
சங்கும் சக்கரமும் கதையும் கையிலேந்தி
மயில்பீலியணிந்து கையில் வெண்ணையுடன்
கையில் குழலோடு காட்சி தருமுனை
No comments:
Post a Comment