ஆடிப்பூரம் தனில்……
பல்லவி
ஆடிப்பூரம்தனில் அவதரித்த ஆண்டாளை
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியை த்துதித்தேன்
அனுபல்லவி
ஈடிணையில்லாத கேசவனை மணந்தவளை
பாடிப் பல பாசுரங்களியற்றிய பைங்கொடியை
சரணம்
வேடிக்கை பல செய்த வேயர் குல விளக்கை
கூடியிருந்து குளிர்ந்திடுவோமென்றவளை
கோடியில் ஒருத்தியென ஏற்றமுடையவளை
நீடித்த புகழுடனரங்கனையடைந்தவளை
No comments:
Post a Comment