வாயவனை யல்லது வாழ்த்தாது, கையுலகம்
தாயவனை யல்லது தாம்தொழா, - பேய்முலைநஞ்
சூணாக வுண்டான் உருவொடு பேரல்லால்,
காணாகண் கேளா செவி.
பொய்கையாழ்வார்திருவடிகளேசரணம்
புவனமுண்டுமிழ்ந்த……
பல்லவி
புவனமுண்டுமிழ்ந்த கேசவனையல்லாது
உவகையுடன் கை மற்றொருவரைத் தொழாது
அனுபல்லவி
சுவைத்துப் பேய்முலையுண்ட கண்ணபிரானன்றி
செவியும் கண்ணும் வேறு கேளாது நோக்காது
சரணம்
குவலயம் காக்க கோவர்த்தனமேந்திய
அவனையன்றி வாய் வேரொருவரை வாழ்த்தாது
நவநீதன் புகழன்றி நாவேறு பாடது
அவனியில் தாடாளனன்றி வேறுதெய்வமில்லை
No comments:
Post a Comment