Then in the yore the Lord entered the lake of lotus buds and opened blossoms, then placed his feet on the hoods of the venom-spitting snake. He resides in Nangur where pennons atop mansion: play with the Moon and bangled coastal women roam the streets peddling rice pearls for pearl rice. Offer worship in Manimadakkoyil, O Heart!
தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத்* தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம்*
இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி தன்மேல்* அடி வைத்த அம்மான் இடம்*
மாமதியம் திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில்* செழு முத்து வெண்ணெற்கு எனச் சென்று*
முன்றில் வளைக்கை நுளைப் பாவையர் மாறும் நாங்கூர்* மணிமாடக்கோயில் வணங்குஎன்மனனே!
திருமங்கையாழ்வார்திருவடிகளேசரணம்
ஶ்ரீபுண்டரீகவல்லிதாயார்ஸமேதஶ்ரீநாராயணன்
கமலநாபனை……
பல்லவி
கமலநாபனை ஶ்ரீமன் நாராயணனை
மணிமாடக்கோயிலில் கண்டு துதித்தேன்
அனுபல்லவி
அமரரும் முனிவருமடியாரும் பணிந்தேத்தும்
சமமென தனக்கொருவரில்லாத கேசவனை
சரணம்
கமல மலர்களும் மொட்டுக்களும் நிறைந்த
கமல தடாகத்தில் விளங்கும் விட அரவின்
தலைமீது கால் வைத்தாடிய திருமாலை
அளத்தற்கரியானை நந்தாவிளக்கை
No comments:
Post a Comment