அன்னை ஜானகியே…….
பல்லவி
அன்னை ஜானகியே உன்னையே துதித்தேன்
கன்னல் ஶ்ரீராமனிடம் எனக்கருளச் சொல்வாயென
அனுபல்லவி
பன்னகசயனன் கேசவன் துணைவியாய்
முன்னம் பாற்கடலில் உதித்தவளும் நீயன்றோ
சரணம்
மன்னன் ஜனகன் விரும்பும் திருமகளே
முன்னம் காகாசுரனைக் காத்தவளும் நீயே
நன்னெறி காக்கும் சீதாப்பிராட்டியே
உன்னருள் வேண்டினேன் தயைபுரிவாயே
No comments:
Post a Comment