Monday, 17 July 2023

என்ன தவம்….

 ஆடிப்பூர உற்சவ சமயத்துல ஸ்ரீ ஸ்ரீநிவாஸன் என்பவரது கோதாஸ்துதி பற்றிய உபன்யாசம் கேட்டு மகிழ்ந்தேன் அதில் ஒரு இடத்தில் மிக அருமையாக சொன்னார்

 அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள  எனக்குஆசை   ஆண்டாள் பேசும் தெய்வம் என்பது இதன் மூலம் நாம் அறியலாம்இந்த சம்சார சாகரத்தில் மூழ்கிய நாம் சில புண்ய காரியங்களை செய்தாலும்....

 பலவிதமான பாப காரியங்களை பண்ணி....இறுதியில் பகவானிடம் சரணாகதி பண்ணுகிறோம்

 அப்போ பெருமாள் நமது பாப காரியங்களை கணக்கிட்டு நம்மிடம் உனக்கு எப்படி மோட்க்ஷம் தருவது என யோசிக்கும் ஸமயம்...  தாயார் ஆண்டாள்  பெருமாளிடம்ஐயோ பாவம்! இந்த குழந்தை!! ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டான்! அத பாராட்டாதீங்கோ...

அவனோ நாமே கதி..என வந்து நம்மிடம் சரணாகதி பண்ணியாச்சு...

 அதனால அவனுக்கு மோட்க்ஷம் கொடுங்கோ என சிபாரிசு பண்றாளாம்...ஆண்டாள் நமக்காக

ஆண்டாள்நம்மை போலவே இந்த பூமியில் 1300 வருஷங்களுக்கு முன்பு அவதாரம் பண்ணி...

 லோகத்துல நாம் யாவரும் எப்படி வாழணும் ...என்பதை திருப்பாவை மூலம் நமக்கருளி.

அவளோ பெருமாளிடம் பக்திகாதல் கொண்டு....

மீளா விரதம் பூண்டு... அந்த. கோவிந்தனை அடைந்த பண்யவதி ஆண்டாள் தாயார்....

உதாரணத்துக்கு ஒரு வறண்ட பாலைவனத்தில் ஒருவன் தண்ணீர் கிடைக்காமல் தாகத்தினால் நா வறண்டு பிராணன் போகும் ஸமயம்....திடீரென ஒரு மின்னல் தோன்ற...அவனுள் ஒரு மிக பெரிய நம்பிக்கை !!அடுத்தக்ஷணம்  கறுத்த மேகங்கள் சூழ ...மழை பெய்ய ஆரம்பிக்கும் பொழுது ....அவனுள் ஏற்படும் மகிழ்ச்சியே அலாதி. ...அதேபோல இந்த இடத்தில் மின்னல் பெரிய பிராட்டியாகவும்... மேகங்கள் பகவானவாகவும்.... மழையை ஆண்டாளாகவும் குறிப்பிடுகிறார்ஸ்வாமி தேசிகன். அப்பேற்பட்ட தயாள குணம் கொண்ட ஆண்டாள்... அவள் நமக்காக சிபாரிசு  செய்ய... கீழ்காணும் யுக்தியை பிரயோகம் பண்ணுவாளாம் பெருமாளிடம்

ஆண்டாள்  தன் புருவத்தை சற்றே உயர்த்தி பெருமாளை பார்த்துவிட்டாலே போதுமாம். 

பெருமாள் புரிந்து கொண்டுவிடுவாராம்நம்மைசரணாகதி பண்ணின இந்த ஆன்மாவுக்கு கண்டிப்பா மோட்க்ஷம் கொடுத்து ஆகணும். இல்லாட்டா தாயாரின் கோபத்தில் நாம் ஆளாகிவிடுவோமே என்று

குறிப்பறிந்து கொள்வாராம்.. பெருமாள். எப்பேற்பட்ட அனுபவம் இது!!

தினசரி அவளை சேவிக்கும் பாக்யம் எனக்கு கிடைக்க நான்என்ன தவம் செய்தனை !!

ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார்திருவடிகளே சரணம்... — with Meenakshi Paatti Subbu Thatha and 51 others.

                                                   என்ன தவம்….


                                                          பல்லவி

                                  என்ன தவம் செய்தோனோ தாயவளை பணிந்திடவும்

                                  கன்னதல்லியாம் கடல் மகளை  துதித்திடவும்

                                                      அனுபல்லவி

                                  மன்மதனை ஈன்றவளைப் புன்னகை முகத்தாளை    

                                  கன்மவினைப்பயனை களைந்திடச்செய்பவளை   

                                                          சரணம்

                                  மின்னலாய்த் தோன்றிடும் பெரிய பிராட்டியவள்

                                  சென்ன கேசவனாம் மேக வண்ணனிடம்

                                  தன் புருவமுயர்த்தி அடியர்க்கருளச் சொல்ல

                                  புன்முறுவலுடவனும் முக்தி தரச்செய்பவளை



                             

No comments:

Post a Comment