உள்ளம் உருகுதய்யா…….
பல்லவி
உள்ளம் உருகுதய்யா கந்தா…..
பிள்ளை உனைக் காண எந்தன்
அனுபல்லவி
கள்ளத்தனமாக லீலைகள் பல புரிந்த
கள்வன் கேசவனின் அன்பு மருகோனே
சரணம்
தெள்ளு தமிழ் வளர்த்த சங்கத்தலைவோனே
துள்ளி வரும் வேலைக் கையில் வைத்திருப்பவனே
அள்ளக்குறையாத கருணையளிப்பவனே
மெள்ள உந்தனருளை அடியேன் யான் பெறவே
No comments:
Post a Comment