முத்தரச நல்லூர்……
பல்லவி
முத்தரசநல்லூர் முகுந்தனைக் காணவே
சித்தம் ஏங்கித்தவித்தேன் வாடினேன்
அனுபல்லவி
உத்தமன் குருவாயுரப்பனைப் போலவே
இத்தரை மீது கோயில் கொண்டிருக்கும்
சரணம்
குத்தம் குறையின்றி பக்தருக்கருளும்
நித்திலத் தொத்தெனும் பக்தவத்சலன்
எத்திசையும் புகழ் விளங்கும் மாதவன் கேசவன்
தித்திக்குமழகன் பவனபுரக் கண்ணன்
No comments:
Post a Comment