அனாத நாதன் நீயே……
பல்லவி
அனாத நாதன் நீயே கேசவா
மனதாரத் துதித்தேன் உனையே அனுதினம்
அனுபல்லவி
வினோத லீலைகள் புரிந்திடும் நீயேயென்
மனோரதம் தனைப் பூர்த்தி செய்வாயே
சரணம்
சனாதன தர்மம் போற்றும் தேவனே
அனயாசமாயரக்கரையழித்தவனே
கனாவிலும் நான் உனை மறவேனே
சுனாதம் தரும் குழலூதும் கண்ணனே
No comments:
Post a Comment