தூணைப் பிளந்து……
பல்லவி
தூணைப்பிளந்து வந்த நரசிம்மனைப்பணிந்தேன்
காணப் பேரின்பம் தரும் ஆணழகன் கேசவனை
அனுபல்லவி
மாணப் பெரிய வடிவுடைய மாதவனை
ஆணவ வடிவான அரக்கனை அழித்தவனை
சரணம்
வேணு கானம் தரும் வேணுகோபாலனை
வாணுதல் திருமகளை மடியில் வைத்திருப்பவனை
நாணும் கோபியரின் மனங்கவர்ந்த கண்ணனை
ஓணப் பண்டியின் நாயகனாம் வாமனனை
நரசிம்மன்
தூணைப் பிளந்து
கொடுமையை அழிக்க
விரைந்து வந்த
நரசிம்மன்
பக்தனைக் காக்க
பக்தியை நிறுத்த
இறங்கிவந்த
நரசிம்மன்
தீயதை அழித்து
நன்மையை நிறைத்து
வந்தவன் நீயே
நரசிம்மன்
ஆணவம் என்னும்
அரக்கனை மிதித்து
அருளிட வந்தவன்
நரசிம்மன்
ஐம்புலன்கள் வழியே
வந்திடும் கயவரை
பிய்த்து எறிபவன்
நரசிம்மன்
சாந்தம் கருணை
அன்பு பக்தியின்
உண்மையின்
ஆட்சியே நரசிம்மன்.
ஆக்கம்
மணிமாலை.
No comments:
Post a Comment