நாரதர் சொன்னார் நாராயண என்று,
பிரகலாதன் சொன்னார் ஹரி ஹரி என்று,
த்ரெளபதி சொன்னாள் கோவிந்தா என்று,
துருவன் சொன்னார் வாசுதேவ என்று,
அனுமன் சொன்னார் இராமா என்று,
வியாசர் சொன்னார் கிருஷ்ண கிருஷ்ண என்று,
கஜேந்திரன் சொன்னார் ஆதி மூலம் என்று,
துக்காராம் சொன்னார் விட்டலா என்று,.
நாமும் சொல்வோம்.
நாமம் சொல்வோம்
ஜெய் ஜெய் விட்டலா
பாண்டுரங்கா விட்டலா
விட்டல் மகராஜ் கி ஜெய்
நாராயணனைத் துதியென்றார்……
பல்லவி
நாராயணனைத் துதியென்றார் நாரதர்
கூறுங்கள் ஹரி நாம மென்றான் பிரகலாதன்
அனுபல்லவி
தீராவினை தீர்க்கும் கோவிந்தனென்ற ழைந்தாள்
காரார் குழலாள் பஞ்சவர் நாயகி
சரணம்
பார் போற்றும் வாசுதேவனென்றான் துருவன்
ஶ்ரீராமா ராமவென்றே துதித்தானனுமன்
பாரதமெழுதிய வியாசமுனியவனை
கிருஷ்ணா கிருஷ்ணா வென்றே அழைத்தார்
ஓராயிரம் வருடம் தவித்த கஜராஜனவனை
ஆதிமூலமே என்று கதறியழைத்தான்
ஊர் மெச்சும் கேசவனை விட்டலனென்றார்
சீரும் சிறப்பும் மிகு பக்த துக்காராம்
நாமும் சொல்வோம் விட்டலன் நாமம்
விட்டலா விட்டலா பண்டுரங்க விட்டலா
ஜெய ஜெய விட்டலா ஹரி ஹரி விட்டலா
ஜெய ஜெய விட்டலா ஹரி ஹரி விட்டலா
No comments:
Post a Comment