கோவிந்தனொருவனே….
பல்லவி
கோவிந்தனொருவனே நான் வணங்கும் தெய்வம்
தேவி பத்மாவதியை மார்பினில் தாங்கும்
அனுபல்லவி
கூவியழைத்தால் ஓடோடி வருவான்
பூவிதழ் மலர்ந்தொரு புன்னகை புரிவான்
சரணம்
ஈவிரக்கமின்றி அரக்கர்களை அழித்தவன்
மாவிடை வாகனனும் பிரமனும் பணிந்துடும்
தேவகி மைந்தன் தேவாதி தேவன்
சேவடி பணிவோர்க்குத் தாவிவந்து அருள் புரிவான்
No comments:
Post a Comment