மகர வடிவினில் அழகுச் செவிகளாம்
இரண்டில் பளிச்சிடும் நீலமும்,
முகரும் நெடியதாம் மயக்கு நாசியும்,
பவழ இதழ்களில் தோன்றிடும்
மிகவும் குளுமையாய் புலரும் முறுவலும்,
விலகும் இதழிடை ஒளியுறும்
தகவு பற்களும் திகழும் எழில்முகம்
களிக்க எனக்குநீ காட்டுவாய்.
उत्तुङ्गोल्लासिनासं हरिमणिमुकुरप्रोल्लसद्गण्डपाली-
व्यालोलत्कर्णपाशाञ्चितमकरमणीकुण्डलद्वन्द्वदीप्रम् ।
उन्मीलद्दन्तपङ्क्तिस्फुरदरुणतरच्छायबिम्बाधरान्त:-
प्रीतिप्रस्यन्दिमन्दस्मितमधुरतरं वक्त्रमुद्भासतां मे ॥४॥
உத்துங்கோ³ல்லாஸிநாஸம் ஹரிமணிமுகுரப்ரோல்லஸத்³க³ண்ட³பாலீ-
வ்யாலோலத்கர்ணபாஶாஞ்சிதமகரமணீகுண்ட³லத்³வந்த்³வதீ³ப்ரம் ।
உந்மீலத்³த³ந்தபங்க்திஸ்பு²ரத³ருணதரச்சா²யபி³ம்பா³த⁴ராந்த:-
ப்ரீதிப்ரஸ்யந்தி³மந்த³ஸ்மிதமது⁴ரதரம் வக்த்ரமுத்³பா⁴ஸதாம் மே ॥ 100-4॥
ஶ்ரீகுருவாயூரப்பன்திருவடிகளேசரணம்🙏🙏🌺🌺👏👏🌸🌸
அகம் குளிர……
பல்லவி
அகம் குளிரக் காட்சி தரும் குருவாயுரப்பனை
சுகமளிக்கும் பவனபுரக் கண்ணனைத் துதித்தேன்
அனுபல்லவி
புகலிடம் அவனிரு திருவடிக் கமலமென்றே
அகிலம் போற்றும் கேசவனை மாதவனை
சரணம்
தகவுப் பல் காட்டும் எழில் முகமும்
மகர வடிவுச்செவிகளில் அழகுடன்
திகழும் பளிச்சிடும் நீலமும்
மிகவும் குளுமையான இதழ் முறுவலுடனும்
No comments:
Post a Comment