உம்பரால் அறியலாகா ஒளியுளார் ஆனைக்காகி, செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார், நம் பரமாயது உண்டே நாய்களோம் சிறுமை ஓரா, எம்பிராற்கு ஆட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே. திருமாலை 28
பிரம்மா போன்ற தேவர்களால் கூட, இப்படிப்பட்டது என்று அளவிட்டு அறியமுடியாதபடி, தேஜோமயமான பரமபதத்தில் உள்ள எம்பெருமான், கஜேந்திரன் என்ற யானைக்காக, சிவந்த மாமிசத்தைச் சாப்பிட்டு வாழும்படியான முதலைமேல், கோபித்துக்கொண்டு வந்து அருளினான். இப்படி தம் அடியவர்களைக் காக்கும் பொருட்டு அவன் இருக்கையில், நம்மை காப்பாற்றிக்கொள்ள நமக்கு என்ன பாரம் ? நாய் போல் இருக்கும் நம்மிடத்தில் உள்ள குறைகளை கருத்தில் கொள்ளாமல், இருக்கும் நம்பெருமானுக்கு தொண்டு செய்யாமல், எதற்காக தான் பிறந்தேன் என்று ஆழ்வார் வருந்தும் பாடல்.
உம்பரால் அறியலாகா ஒளியுளார் ஆனைக்காகி, செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார், நம் பரமாயது உண்டே நாய்களோம் சிறுமை ஓரா, எம்பிராற்கு ஆட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே.
அவனியோர்…..
பல்லவி
அவனியோர் போற்றும் கேசவனைத் துதித்தேன்
புவனமுண்டுமிழ்ந்த கண்ணனை யாதவனை
அனுபல்லவி
நவநீதனவனுக்குத் தொண்டு செய்யாது
பவந்தனில் நாயாய்த்திரிந்த நான் வருந்தி
சரணம்
தேவருமறியாத ஒளியுடைய திருமாலை
பூவுலகிலோர் சிவந்த மாமிசம் தனையே
உவந்துண்ணும் முதலை மேல் சீறிப்பாய்ந்து
கவலையோடழைத்த கரிக்குதவிய மாலனை
No comments:
Post a Comment