வலி தந்து…..
பல்லவி
வலி தந்து அருள் வேண்டச்செய்வதேன் ஶ்ரீராமா
பொலிவான களையுடைய முகம் கொண்ட அழகனே
அனுபல்லவி
மலிவாக அடியார்கள் அடையும் பொருள் நீயே
பலிக்கருள் தந்த வாமானனே கேசவா
சரணம்
நலிவடைந்தோர் நலம் பேணும் நாராயணனே
அலியாகி ஆணாகிப்பெண்ணாகி இருப்பவனே
சலிப்படையச் செய்யாமலெனைக் காக்க வேண்டுமென
கலியில் கண் கண்ட தெய்வமுனைத்துதித்தேன்
No comments:
Post a Comment