எனைக்காக்க…..
பல்லவி
எனைக்காக்க வா ஓ கேசவா
உனைத்தானே நான் நம்பினேனய்யா
அனுபல்லவி
அனைத்தும் நீயெனவே அறிந்தேன் மாதவா
வினைப்பயன் களைந்திட நீயேயென் துணை
சரணம்
தினையளவு உனையே துதித்தாலும் போதும்
பனையளவு பலன்களை அள்ளித் தருபவனே
முனைந்துனை துதித்திடுமடியார்க்கெல்லாம்
சுனை நீராய்ச்சுரக்குமருள் தருவோனே
No comments:
Post a Comment