தினமொரு புதுப்பாடல்…..
பல்லவி
தினமொரு புதுப்பாடல் உனைப்போற்றி நான் பாட
எனக்கொரு வரமருள்வாய் சென்ன கேசவனே
அனுபல்லவி
மனம் முழுதும் உனை நினைந்து உனையே சரணடைந்து
அனங்கனைப் பிரமனைப் படைத்தவனே நாராயாணா
சரணம்
வனமாலை கௌஸ்துபம் துளபமணிந்தவனே
இனிய உன் மணிமார்பில் திருவை வைத்திருப்பவனே
வினதையின் மகனை வாகனமாய்க் கொண்டவனே
அனந்தசயனனே ஆதிமூலமே
No comments:
Post a Comment