பரமேச்வரி நீயே……
பல்லவி
பரமேச்வரி நீயே பரிந்தருள் புரிவாயே
அரனயனரி பணி லலிதாம்பிகையே
துரிதம்
சுரபதி, நரர் சுரர், நாரதர்,தும்புரு,
கரம் பணிந்தேத்தும் காமேச்வரியே
அனுபல்லவி
வரமருளும் கரமும் அபயகரமும் காட்டும்
பர்வத குமாரி கேசவன் சோதரி
சரணம்
கரங்களில் பாசாங்குசமேந்தும்
திரிபுரசுந்தரி ஏகாம்ப்ரேச்வரி
சரணடைந்தோர் நலம் பேணும் ஶ்ரீகாமாக்ஷி
அறம் தழைக்கும் காஞ்சி மாநகர் வளர்
No comments:
Post a Comment