பேச்சு மொழியை விட...
மௌனமொழிக்கு அதிவேக சக்தி உண்டு சக்திவேலா ...
நீயும், நானும்... இப்படி ஊமைகளாகிறோம் ... சிலநேரம்...
மனதும் மனதும் பேசும் மனமொழியிலும் ... சிலநேரம்...
எப்படி இது சாத்தியம்?
பொய் என்பார் உண்டு...
நாமிருவரும் பேசும் இன்னொரு அற்புதமொழி ஒன்றுண்டு...
அது விழிமொழி ...
கண்களுக்குள் பேசலாமே ஓராயிரம்...
கேள்வி, பதில்கள் சரளமாக கிடைக்கும்...
ஒலியின் ஓங்கார ஓம்மந்திரநாயகனே சரணமய்யா...!
நமக்கிடையே.….
பல்லவி
நமக்கிடையே மொழியெதுவும் தேவையில்லை முருகா
குமரா உன் மௌனமே நீ பேசும் மொழியன்றோ
அனுபல்லவி
உமயாள் மைந்தனே கேசவன் மருகனே
சுமக்கும் பழியுடையார் பொய்யென்பாரிதனை
சரணம்
அமைதியே மொழியாகும் உனக்குமடியார்க்கும்
நமக்குமதுவே விழியிரண்டும் மொழி பேசும்
எமக்குன் ஓங்கார ஒலியே உந்தன் சொல்
அமராபுரி வாழ் ஆறுமுகப் பெருமானே
No comments:
Post a Comment