வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை* விழுமிய முனிவரர் விழுங்கும்*
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை* குவலயத்தோர் தொழுதுஏத்தும்*
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை* ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்*
மாட மா மயிலைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே.(2)
அல்லிக்கேணியில்…..
பல்லவி
அல்லிக்கேணியில் கண்டு துதித்தேன்
அல்லலிடர் களையும் பார்த்தசாரதியை
அனுபல்லவி
சொல்லுக்கடங்காத அழகிய கேசவனை
வல்லரக்கர் பலரை மாய்த்த கண்ணனை
சரணம்
வேதப்பொருளின் சுவையைப் பயனை
தீதற முனிவர்கள் அடி பணிந்தேத்தும்
மாதவனை யாதவகுலக் களிற்றை
ஆதியை அமுதை அழகிய மாதரார் வாழ்
No comments:
Post a Comment