வேணுகோபாலன்……
பல்லவி
வேணுகோபாலன் பாதம் பணிந்தேன்
காணுவோர் மனங்களை மயங்கச்செய்திடும்
அனுபல்லவி
ஆணழகன் கேசவன் அனந்தசயனன்
சாணுரன் முஷ்டிகன் மல்லரை மாய்த்தவன்
சரணம்
தூணினைப் பிளந்து வந்த நரசிம்மனவனே
மாணப்பெரியவன் மாதவன் மதுசூதனன்
நாணுறும் கோபியர் மனங்கவர்ந்த கண்ணன்
தாணுமாலயனென மூவருமானவன்
No comments:
Post a Comment